மாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய இணையம்

பாடல் :- மூசுமலை மீதிலேறி போய்வெடித்தவன்….

மூசுமலை பேசவில்லையோ துறைமுகத்தில் அனலெழுந்து வீசவில்லையோ…..!!!!!!!!!!!!

பாடலைப் பாடியவர் மேஜர் சிட்டு. 01.08.1997அன்று ஜெயசிக்குறுய் சமரில் வீரச்சாவடைந்த சிட்டு 70ற்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இன்றுமேஜர்சிட்டுவின் 40வது பிறந்தநாள்.

இந்நாளில் சிட்டு பாடிய 27பாடல்களை உலகுவாழ் தமிழர்களுக்காக தருகிறோம்.

1)       விழியில் சொரியும் அருவிகள்

2)       வெண்ணிலவு சாய்ந்து ஊர் தூங்கும் நேரம்

3)       வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்

4)       வருவாய் வருவாய் என நாம் இருந்தோம்

5)       வருக எங்கள் மக்களே வெற்றி

6)       உருவேதும் தெரியாது கருவேங்கை

7)       உன்னத விடுதலை உச்சங்களே

8)       தளராத துணிவோடு களமாடினாய்

9)       சோலையிலே பாடும் செஞ்சோலையிலே பாடும்

10)    சிறகு முளைத்து உறவை நினைத்து

11)    சாவினைத் தோழ்மீது தாங்கிய காவிய

12)    புலியொருகாலமும் பணியாது எந்தப்படை

13)    ஓட்டிகளே படகோட்டிகளே

14)    நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

15)    நீலக்கடலேறி வந்து மேனிதொடும்

16)    மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற

17)    குருதி சொரிந்து கடலின்

18)    கண்ணீரில் காவியங்கள் சென்னீரில்

19)    கடலின் அலைவந்து கரையில் சதிராடும்

20)    கடலிடை ரதீசும்

21)    எங்கே எங்கே வேங்கைகள் எங்கே

22)    சின்னஞ்சின்ன கண்ணில் ஒரு மின்னல்

23)    அங்கயற்கண்ணிக்கு ஆயிரம் ஆயிரம்

24)    அலைதாவியே

25)    பகை விளையாடிடும் கடலிடை

26)    நிறைகுடத்தை ஏந்திக் கொண்டு

27)    வாழ்த்துங்கள் நெஞ்சங்களே எமை வாழ்த்துங்கள்

மீண்டும் சிட்டென வருவாயா?

தாயகவிடுதலைக்கனவோடு

சிட்டென்று  பெயர் கொண்டு…

சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!

சட்டென்று போனானே…

சிறகு முளைக்கும் முன்னால்!

பாடல்கள் பல தந்து நின்றவன் – மண்ணின்

தேவைகள் சில முந்த… தன் காதலையும் தேடலையும்,

ராகம் பாட விட்டுவிட்டு ,

தான் காதலித்த மண்ணுக்காய்…

சிட்டாய்ப் பறந்து போனானே பாடலோடு!

வந்த பகை   நின்று முறிக்க,  இடையிடை

புகுந்தவன்… தன் வாழ்வினை

விடை கொடுத்து… வந்தானே பாடையோடு!

நீ தந்த ராகங்களும் பாடல்களும்…

சிறுநாக்காய்…. எம் தொண்டைக் குழியில் இன்னும்,

அவ்வப்போது அலறி இசைக்கும்! – ஆனால்

உன்னினிமை ராகம் கேட்க நீ வரணும் மீண்டும் சிட்டாய்!

உறுதியாய் ஒன்றுமட்டும்….

எம் தாகம் தீரும்வரை… உன் ராகம் ஓயாது!

உன் ராகமும் தாளமும் இன்றும் எம்மோடு,

தணியாத தாகமாய்… தகிக்கிறது!!!

-கவிதை-

மாவீரன் மேஜர் சிட்டு!

மரணத்தின் முகநூலுக்கு,

மனம் விரும்பி, நட்பு  நாடிய,

மாவீரர்கள் வரிசையில்,

முண்டியடித்து  முன்னேறியவன்!

வாழ்வின் வசந்தத்திற்கு

விடை கொடுத்தனுப்பிய,

வீரத் தளபதிகளின் வரிசையில்

விதையாகி வீழ்ந்தவன்,

மாவீரன் மேஜர் சிட்டு!

வீசும் வாடைக்  காற்றின்

வெறி அடங்கும்  ஓசையில்…

அசையும் காவோலைகளின்

சர சரப்புச் சத்தத்தில்  ,

ஆசையுடன் நிலம் தழுவும்

அலைகளின்  முனகலில்,

சிற்றாறுகளின்  சிரிப்பொலியில்,

சங்கீதம் படித்தவன்!

ஓயாத அலைகளின் காலத்தில்,

வெற்றி நடை பயின்ற,

வேங்கைகளின் படை நடையில்,

‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்!

கலைப் பண்பாட்டுக் கழகத்தின்.

காவலனாய் வாழ்ந்தவன்!

கறையாக நிலைத்து விட்ட

கண்ணீரால்  காவியங்களும்,

சிதறிப் போன சொந்தங்களின்,

செந்நீரால் ஓவியங்களும்

செருக்களத்தில் வரைந்தவன்!

பார் போற்றி நிற்கும்

பாடகனாய் மலர்ந்தவன்!

பாசறைக் கீதங்களினால்,

போர்க்களத்தை உயிராக்கி,

குஞ்சும் குருமானுமாய்க்,

கொத்தாக வீழ்தல் கண்டு

நெஞ்சு பொறுக்காது,

போராடப் புறப்பட்டவன்!

புறநானூறு தந்த போர் மகனாய்,

போராடி, வீர மரணம் கண்டவன்!

கிட்டம்மானின் நினைவு நாளில்,

மொட்டவிழ்ந்த பாடலினால்,

கடலம்மாவிடம்   நீதி கேட்டவன்!

சின்னச்சின்னக் கண்களில்,

மின்னல்  விளையாடும் வேளையில்,

உயிர்ப் பூவை, நிவேதனமாக்கி,

ஓமந்தையில் வீழ்ந்தவன்!

போராளிகளின் பாசறையில்,

படைப்பாளியாய் வளர்ந்தவன்!

போராட்டமென்ற  விருட்சத்தின்,

வேரடி மண்ணாகி நின்று,

போராட்ட காலத்தை,

வரலாறுகளில் வரைந்து,

விடுதலையின் வித்துக்களை,

வீதியெங்கும் விதைத்து,

வீர் வரலாறு படைத்து,

விதையாகி  வீழ்ந்தவன்!

மாவீரன் மேஜர் சிட்டு….

 – புங்கையூரான் –

வீரனே நீயின்றி இசைக்கு ஒரு ஐீவனில்லை.

பாடித் திரிந்த குயில் ஒன்று
பாடையில் வீழ்ந்தது.
விடுதலை மூச்சொன்று
வேள்வியில் வித்தாகிப் போனது.
கண் முன்னே இவை எல்லாம்
கனவென்று ஆகாதோ!
கண நேரம் எம் கண்கள்
உனை இங்கே காணாதோ!

நீ பாடக் கேட்டு வீரர்கள்
குழிகளில் துயில் கொள்வர்.
அவர் வாழ்ந்த நிமிடங்கள்
விழி முன் நிஐமென்று ஆகும்.
நீ இன்றி முன்னால் எம்
விழிகளில் உறக்கங்கள் இல்லை.
வீரனே உனையின்றி
இசைக்கு ஒரு ஐீவனில்லை.
எழுந்தோடிக் கண் முன்னே வாராயோ!
எம் கதைகளை உன்குரலில் பாடாயோ!

மண் மீது நீ வாழ்ந்த காலங்கள்
மனதினில் எப்போதும் பொற் கோலங்கள்.
குரலெடுத்து நீ பாடும் பாடல்கள்
விடுதலையின் பூபாள ராகங்கள்.
மூங்கிற் துளைகள் அடைக்கின்ற போதும்
இசையின் இனிமையில் குறையேதும் இல்லை.
மரணம் உனைத் தீண்டிய போதும்
வீரனே உனக்கு மரணங்கள் இல்லை.

காதோரம் இன்றும் உன் பாடல் கேட்கும்;
கண் முன்னே என்றும் உன் வாழ்க்கை தோன்றும்.

– துரைரத்தினம் தயாளன் –

சிட்டுபாடிய பாடல்களிலிருந்து 27 பாடல்களின் தொகுப்பு இணைப்பு

1)       விழியில் சொரியும் அருவிகள்

2)       வெண்ணிலவு சாய்ந்து ஊர் தூங்கும் நேரம்

3)       வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்

4)       வருவாய் வருவாய் என நாம் இருந்தோம்

5)       வருக எங்கள் மக்களே வெற்றி

6)       உருவேதும் தெரியாது கருவேங்கை

7)       உன்னத விடுதலை உச்சங்களே

8)       தளராத துணிவோடு களமாடினாய்

9)       சோலையிலே பாடும் செஞ்சோலையிலே  பாடும்

10)    சிறகு முளைத்து உறவை நினைத்து

11)    சாவினைத் தோழ்மீது தாங்கிய காவிய

12)    புலியொருகாலமும் பணியாது எந்தப்படை

13)    ஓட்டிகளே படகோட்டிகளே

14)    நெஞ்சிலே ரத்தம் கொட்டும்

15)    நீலக்கடலேறி வந்து மேனிதொடும்

16)    மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற

17)    குருதி சொரிந்து கடலின்

18)    கண்ணீரில் காவியங்கள் சென்னீரில்

19)    கடலின் அலைவந்து கரையில் சதிராடும்

20)    கடலிடை ரதீசும்

21)    எங்கே எங்கே வேங்கைகள் எங்கே

22)    சின்னஞ்சின்ன கண்ணில் ஒரு மின்னல்

23)    அங்கயற்கண்ணிக்கு ஆயிரம் ஆயிரம்

24)    அலைதாவியே

25)    பகை விளையாடிடும் கடலிடை

26)    நிறைகுடத்தை ஏந்திக் கொண்டு

27)    வாழ்த்துங்கள் நெஞ்சங்களே எமை வாழ்த்துங்கள்

நீமறைந்து போனாலும் உனது ஞாபகங்களை என்றும் சுமக்கும்உ னது தோழமைகள் உனது குரலுக்கு வசமான உலக இசைவிரும்பிகளும் உனது குரலையும் உனது நினைவுகளையும் காலமுள்ள வரையும் காத்துச் செல்வோம்.

நவம்பர் 4இல் எதிர்பாருங்கள்…..சிட்டுவின் இனியபாடல்கள்……

சாவினைத் தோழ்மீது தாங்கிய காவிய சந்தன மேனிகளே…(பாடல்)


கடலில் அலை வந்து

விழிகளை மூடி குளிகளில் உறங்கும் வீரக்குழந்தைகளே…!